|
ramar songs
Friday, 10 May 2013
rama nama maghimai Jai Sree Ram
Sunday, 28 April 2013
Raamayanam
ஸ்ரீ சீ தா ராம சரிதம் ராகமாலிகா
விருத்தம் ஹம்சத்வனி
ஸ்ரீ ஹனுமனும் பாதம் தாங்க அங்கதனும் குடை பிடிக்க
ஆதிசேஷன் லக்ஷ்மண னாய் அடி பணிந்து உபசரிக்க
பாரத சத்ருக்னர் வெண் சமரம் வீசி நிற்க
பக்தர் பரவசமாய் கண்ணீர் பெரிகிடவே
சப்த ரிஷிகளும் அபிஷேகம் செய்திடவே
ராஜா ராமனாகி சிம்ஹசனதிலே வைதேஹி மனம் குளிர
சூர்யா வம்ச திலக ஜோதி ஸ்ரீ ஜானகி ராமன்
கமலதிரு பாதங்களே சரணம் சரணம்
ராம ராகவா ராம ராகவா
1) ஹம்சத்வனி
பல்லவி
ஸ்ரீ ஜானகி ராமன் புகழ் பாடுவோம்
லவ குசர் காணம் செய்த ராமாயண சரிதம் இதை (ஸ்ரீ )
அனுபல்லவி
வால்மீகி முனிவரும் துளசி தாசரும்
கம்பனும் கண்ணால் கண்டு தரிசித்த காவியம் (ஸ்ரீ )
சரணம்
பக்தர் குறை தீர்க்க ராமன் பாரினில் அவதரித்தான்
மண்ணு புகழ் கெளசலையின் மணி வயிறு வந்தவனாம்
சோதரர் மூவருடன் சத்யா தர்மம் காக்க வந்தான்
ரிஷ்யஸ்ரிங்க முனி செய்த வேள்வியின் பலனை வந்தான்
(ஸ்ரீ )
தசரதன் கண்மணியை வளர்ந்தானே ராகவனும்
கொவ்சிகனை பின் தொடர்ந்து யாகம் தனைகாத்தான்
கொடிய அரக்கர் கூட்டம் நொடியினில் சாய்ந்தது
பதிவ்ரிதை அகலிகை சாபம் தனை நீக்கிய (ஸ்ரீ)
2) தன்யாசி
ஜனகர் குளிரவே மிதிலை நகர் சேர்ந்தான்
சிவ தனுசை வளைத்து ஜானகியை கை பிடித்தான்
தந்தை சொல் காத்திடவே தம்பியும் தாரமுடன்
மணி முடியை துறந்து கொடிய வனம் சென்றான்
பக்தனாம் குகன் சேவையை ஏற்று கொண்டு
பரத்வாஜர் ஆசி பெற்று பஞ்சவடி சேர்ந்தான்
தவகோலம் பூண்டு ராமர் தவம் செய்து வந்தாரே
புத்திர சோகத்தால் இங்கே தசரதன் மறைந்தரே (ஸ்ரீ )
3) கேதரகௌளை
மந்தரை துர் போதனையால் குலபெருமை அழிந்தது
கைகேஹி மைந்தன் பரதன் கதறி துடித்தானே
அண்ணனை தேடிவந்து பாதத்தில் சரணடைந்தான்
அடி பணிந்து கதறி அழுது புலம்பினான்
தந்தை மறைந்த செய்தி கேட்டு ராகவன் மனம் துடித்தான்
புத்திர தர்மங்களை சிறதைய்டேன் செய்தான்
கலங்காதே பாரத நீயும் , விரைவினில் ஓடி வருவேன்
கடுகளவும் சத்தியம் தவற மாட்டேன் என்றான் (ஸ்ரீ)
4) ஷண்முகப்ரியா
சோதரன் மனம் குளிர ராமன் பாதுகை அளித்தானே
தவகோலம் பூண்டு பரதன் சிரம் மேல் பாதுகை தாங்கி
நந்தி கிராமம் தனில் ராகவனை பாதுகையை
பட்டாபிஷேகம் செய்து அரசைகத்தான் பரதன்
அனுசூயை அத்ரிமுனி ஆசி பெற்றான் ராமன்
அசுரர் தனை வதைத்து முனிவர் பயம் நீகினனே
தண்டகாரண்யம் தன்னில் சூர்பனகை அரக்கி வந்தாள்
லக்ஷ்மணன் சினம் கொண்டு கர்வபங்கம் செய்தான் (ஸ்ரீ)
5) அடாணா
இலங்கேஷ்வரன் ராவணன் முடி வணங்கா மா மன்னன்
சூர்பனகை நிலை கண்டான் அடங்காத சினம் கொண்டான்
அழியும் களம் வந்ததாலே பெண்ணாசை மோகம் கொண்டு
சீதையை அபகரிக்க கபடமாய் ஓடி வந்தான்
மாய பொன்மானாக மாரீசனை அனுப்பி வைத்தான்
ஜானகியும் மானை கண்டு மயங்கியே ஆசை கொண்டாள்
மனைதேடி ராமன் கானகத்தில் ஓடி வந்தான்
கபட மாரீசனும் ஓடி ஓடி மறைந்தானே (ஸ்ரீ) 6) காபி
ஹ சீதே ஹ லக்ஷ்மண என்ற ராமன் குரல் கேட்டாள்
மைதிலியும் மனம் பதறி இளையவனை அனுப்பினாளே
ராகவனை தேடி வர லக்ஷ்மணன் புறப்பட்டா னே
விதி செய்த சதியலே பெண் புத்தி பின் புத்தி யாச்சு
தக்க தருணம் பார்த்து கபட சன்யாசி யாகி
ராவணனும் சீதையை அபகரித்துசென்றானே
மாரீசனை வதைத்து ராமன் மனம் பதறி ஓடி வந்தான்
சோதரனே லக்ஷ்மண மோசம் போனோம் என்றான் (ஸ்ரீ)
6) காபி
ஹ சீதே ஹ லக்ஷ்மண என்ற ராமன் குரல் கேட்டாள்
மைதிலியும் மனம் பதறி இளையவனை அனுப்பினாளே
ராகவனை தேடி வர லக்ஷ்மணன் புறப்பட்டா னே
விதி செய்த சதியலே பெண் புத்தி பின் புத்தி யாச்சு
தக்க தருணம் பார்த்து கபட சன்யாசி யாகி
ராவணனும் சீதையை அபகரித்துசென்றானே
மாரீசனை வதைத்து ராமன் மனம் பதறி ஓடி வந்தான்
சோதரனே லக்ஷ்மண மோசம் போனோம் என்றான் (ஸ்ரீ)
7) முகாரி
மைதிலியை காணாது சீதே சீதே என்று கதறி
கானகத்தில் எங்கும் ராகவன் அலைந்திடவே
ஜடாயுவும் ஜனகியின் விபரம் சொல்லி மறைய
தந்தைக்கு செய்வதுபோல் புத்திர கர்மாவும் செய்தான்
கபந்தனுக்கு மோக்ஷம் அளித்தான் ராகவனும்
காத்து நின்ற பக்தை சபரி மனம் குளிர வந்தானே
தெய்வக் கனியை ஏற்று சபரிக்கும் மோக்ஷம் அளித்தான்
அனுமனும் சுக்ரீவனும் ராகவனைத் தேடி வந்தார் (ஸ்ரீ)
8) ஆனந்த பைரவி
அண்ணனாம் வாலியின் அஹன்காரம்
எடுத்துரைத்தான்ஹனுமான்
சோதரன் சுக்ரீவனின் நிலை தன்னை எடுதுரைதாரே
சரணம் ராம எங்களை காது ரட்சிப்பாய் என்றான்
காலமெல்லாம் உந்தன் அடிமை நங்கள் என்றான்
ஹனுமுன் சொல் கேட்ட ராமன் அக்னி சாக்ஷி யாகவே
சத்தியம் செய்து சுக்ரீவனை சோதரனா ஏற்றான்
கொடிய வானரன் வாலி ராம பாணத்தால் மறைந்தான்
தாரையும் அங்கதனும் ராமனை சரணடைந்தனர்
9) பைரவி
ஜானகியை தேட ராஜா சுக்ரீவனும் ஆணையிட்டான்
மைதிலியின் ஆபரணம் கண்டு ராமன் மனம் மகிழ் ந்தான்
சீதையின் இருப்பிடம் சம்பாதி கண்டுரைதார்
ஹனுமனும் ராம நாம துணையுடன் புறப்பட்டாரே
சமுத்ர ராஜனும் சாயா தேவியும் அங்கே
ஹனுமனை பரீட்சித்து ஆசியும் அளித்தாரே
ராமநாம சாபத்தால் கடல் தாவி இலங்கை சேர்ந்தார்
இலங்கிணி அரக்கியை ஜெயித்து நகரில் புகுந்தார் (ஸ்ரீ)
10) ஹம்சானந்தி
சந்திர ஒலி தன்னில் தந்திரமாய் ஹனுமன்
இலங்கையிலே சீதையை எங்கெங்கும் தேடினரே
அசோகா வநேம் தனிலே அன்னையை தரிசித்தரே
ஜானகி மனம் குளிர அன்குலீயம் அளித்தாரே
மனம் மகிழ்ந்து சீதை மனதார வழ்திநாளே
ராமனிடம் சேர்பிப்பதற்கு சூடாமணியும் அளித்தாளே
விரைவினில் வந்து என்னை காத்து ரட்சிக செய்வாய்
சிரஞ்சீவி ஹனுமானே எந்தன் நிலை உரைத்திடுவாய் (ஸ்ரீ )
11) பாகேஸ்ரீ
ஹனுமனும் அன்னையை அடி பணிந்து எழுந்தானே
கலந்கதேதையே விரைவினில் ரகு வீரன் வருவான் என்றான்
ராவணன் படை பலத்தை எடை போடா ஆசை கொண்டான்
பக்க பலமாகவே பிரம்மாஸ்திரம் அமைந்தது
இலன்கேசனை துரும்பாய் மதிதுரைதான் ஹனுமான்
ராகவனை சரணடைந்தால் உயிர் பிழைப்பாய் என்றான்
அக்னி தேவேன் துணையுடன் இலங்கையை சாம்பலாக்கி
கலங்காத மன்னன் மனம் கல்ங்கிட செய்தான் ஹனுமான் (ஸ்ரீ )
12) குந்தலவராளி
கண்டேன் சீதையை என்று ஜெயதுடேன் வந்த ஹனுமான்
ரா கவனை பண ந்து சூடாமணியை அளித்தான்
கண்மணி சீதையை சூடாமணி தனில் கண்டு
மனம் குளிர்ந்த ராமர் ஹனுமனை வாழ்தினரே
அண்ணன் செயல் பொறுக்காமல் சரணடைந்த விபீஷணனை
அபயம் அளித்து ராமர் சோதரனா ய் ஏற்றன ரே
சுக்ரீவேன் ஆக்ங்கையாலே சாகரத்தில் அணை எழுப்பி
ராமநாம துணையுடன் சாகரம் தண்டிடவே ( ஸ்ரீ )
13) மோகனம்
சேது பந்தனம் செய்து இராமலிங்க பிரதிஷ்டை செய்து
வானரபடைகளுடன் இலங்கைநகர் வந்து சேர்ந்தான்
அங்கதன் தூது சென்றும் முடி வணங்கா மன்னன்
முக்கண்ணன் அருள் பெற்றவன் போர் செய்ய புறபட்டானே
விநாச காலம் வந்து விபரீத புத்தியாச்சு
வானர படைகளுடன் போர் செய்ய துணிந்தானே
வீரன் இந திர ஜிதும் லக்ஷ்மணை வீழ்த்திடவே
சமய சஞ்சீவியாய் ஹனுமனும் கத்தானே (ஸ்ரீ )
14) கனடா
சொதேரன் நிலை கண்டு பொங்கி எழுந்த ராமன்
அசுரபடைகளை நொடியினில் வீழ்தினனே
இலங்கை மன்னன் மகுடம் உருண்டிடசெய்தான்
இன்று போய் நாளை வருவாய் தப்பி பிழைப்பாய் என்றான்
அகங்கார புத்தி கொண்ட அடங்காத ராவணனும்
மண்டோதரி புலம்பியும் மறுபடி போர் செய்தான்
கொதித்து எழுந்தான் ராமன் கூர்பாணம் துளைத்தது
முடி வணங்கா மன்னன் அடியோடு சாய்ந்தா னே (ஸ்ரீ )
15) கல்யாணி
ராமபானத்தால் மன்னன் நற்கதி அடடைன்தானே
மண்டோதரி பதிவ்ரிதை மக்ஹிமை அடைந்தாலே
ராகவன் சீதையை அக்னி பரீக்ஷை செய்து ஏற்றரே
அன்னை மனம் குளிரவே அகம் மகிழ்ந்தான் ராமன்
இலங்கை மன்னன்க விபீஷனனை சூட்டி
வானரப்படை மகிழ அயோதிக்கு புறப்பட்டானே
புஷ்பக விமானத்தில் பறந்து வந்தன் ராமன்
பரதனுக்கு செய்தி சொல்ல ஹனுமனை அனுப்பினானே ( ஸ்ரீ )
16) கமாஸ்
வந்தான் ராகவன் என நல்ல செய்தி கேட்ட பரதன்
அக்னியை வளம் செய்து ஹனுமனை பணிந்தானே
ராகவன் ஓடி வந்து சோதரனை அணை திடவே
ஆனந்த கண்ணீரால் அபிஷேகம் நடந்தது
கோசலை ராமனாகி பட்டபிஷேகம் கொண்டு
தசரத ராமனாகி தரிசனம் தந்தாரே
ராஜா ராமனாக ராஜ்யபிஷேகம் கொண்டு
வைதேஹி மனம் குளிர ஸ்ரீ சீத ராமனாணன் (ஸ்ரீ)
17) சுருட்டி
சப்த ரிஷிகளும் புண் ணிய தீர்த்தம் கொண்டு
அபிஷேகம் செய்து ஆனந்தம் பொங்கிடவே
தேவரும் மூவரும் அடி பணிந்து மகிழவே
பட்டாபி ராமனாக சிம்ஹாசனம் அடைந்தார்
ஹனுமான் திருபாதம் தாங்க பரதன் வெண் குடை பிடிக்க
இளையவன் சாமரம் வீச பக்தர்கள் அடி பணிய
பந்துக்கள் பேரானந்த கண்ணீர் பெருகி நிற்க
புஷ்பா மழை பொழிய ராஜா ராமனானான்
புஷ்பா மழை பொழிய சீத ராமனானான் ( ஸ்ரீ )
18) ஸ்ரீ ராகம்
லாவகுச்சர் கானம் செய்த திவ்ய சரிதம் இதை
ஏதும் அறியா பேதை என்னால் கூற த்தகுமோ
அறிந்தும் அறியாமலும் சிறு பிழை இருந்தாலும்
பொறுத்து ரக்ஷிபாய் ராம சரணம்
நமாவளி
பட்டாபி ராம சரணம் ஜானகி ராம சரணம்
கல்யாண ராம சரணம் அறி ஜெயா ராம சரணம்
வைதேஹி ராம சரணம் தசரத ராம சரணம்
கோசலை ராம சரணம் அயோத்தி ராம சரணம்
ஸ்ரீமான் நாராயண ஹனுமந்த வீர சரணம்
ஸ்ரீ ராம் ஜெயா ராம் ஜயஜய ராம்
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜயஜய ராம்
ஸ்ரீ ராம் ஜெயா ராம் ஜயஜய ராம்
ராம் ராம்
மங்களம்
பக்தியோடு ராம கதை பாடும் பக்தர்
நித்ய கல்யாணமாய் எத்தினமும் வாழ்வர்
சத்தியமாய் ஹனுமான் துணை நின்று காப்பான்
வைதேஹி ராமனின் பேரருள் பெருகும்
கோசலை ராமனுக்கு ஜெய மங்களம்
ஜானகி ராமனுக்கு சுப மங்களம்
பட்டாபி ராமனுக்கு ஜெய மங்களம்
ஆஞ்சநேய மூர்த்திக்கு சுப மங்களம்
Subscribe to:
Posts (Atom)